1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:22 IST)

தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
 
10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று சாதனை செய்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். அதோடு வட்டு எறிதல் வெள்ளி வென்ற யோகேஷ், ஈட்டி எறிதல் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.