ஞாயிறு, 16 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:47 IST)

ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக விடுபட்ட கிறிஸ் கெய்ல்!

ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக கிறிஸ் கெய்லின் பெயர் இடம்பெறவில்லை.

ஐபிஎல் தொடரின் 14 ஆண்டுகால சீசன்களில் மிகவும் தாக்கம் செலுத்திய வீரர்களில் கிறிஸ் கெய்லும் ஒருவர். பெங்களூர் அணிக்காக அவர் விளையாடிய ஆண்டுகளில் சிக்ஸர் மழை பொழிந்து ஐபிஎல் போட்டித் தொடரை பொழுதுபோக்கின் உச்சமாக ஆக்கினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் பேட்டிங்கில் தடுமாற்றம் தெரியவே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவர் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கெய்ல் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.