டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சற்றுமுன்னர் தொடங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் சற்று முன்னர் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. அதில் அதிரடி தொடக்கமாக 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்துள்ளது.