செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (13:22 IST)

தமிழகத்தில் 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி: அரசு தகவல்

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 43 ஆயிரத்து 796 கர்ப்பிணி பெண்களுக்கு முதல் தவணையும் 59 பேருக்கு இரண்டாம் தவணையும் என 43 ஆயிரத்து 855 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதிகபட்சமாக விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களிலும் குறைந்தபட்சமாக செங்கல்பட்டு ராமநாதபுரம் மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களூக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது