டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா: 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டில் தென் ஆப்பிரிக்காவும், ஒன்றில் இந்தியாவும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று ராஜ்கோட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்தியா களமிறங்கியது
இந்தியா 2-வது ஓவரிலேயே ருத்ராஜ் விக்கெட்டை இழந்ததை அடுத்து தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர். இந்தியா இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரையும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது