மூன்றாம் நாள் – மடமடவென விக்கெட்டை இழக்கும் தென் ஆப்பிரிக்கா !

Last Updated: சனி, 12 அக்டோபர் 2019 (13:07 IST)
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் அருமையான இரட்டைச் சதத்தால் இந்தியா 601 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்ததது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை நேற்றுத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றே 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
 
இந்நிலையில் இன்று போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மேலும் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. சற்று முன்பு வரை 23 ஓவர்களில் 57 ரன்களை சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. அணியின் கேப்டன் பாஃப் டூ பிளஸ்சி 6 ரன்களோடும் டிகாக் 4 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும் முகமது ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :