1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India beat zimbabwe in 10 wickets

முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

india won
இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
 இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை சேர்ந்து செய்த நிலையில் ஜிம்பாவே முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது
 
இதனை அடுத்து 190 ரன்கள் இலக்கு என்ற நிலையுடன் களத்தில் இறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 81 ரன்களும் சுப்மன் கில் 82 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
189 ரன்களுக்குள் சுருண்ட ஜிம்பாப்வே… இந்திய பவுலர்கள் அபாரம்!