மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் !

Last Updated: திங்கள், 18 ஜனவரி 2021 (12:48 IST)

பிரிஸ்பேனில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்து உள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் ஆஸி அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல்நாளை போல மீண்டும் மழைக் குறுக்கிட்டுள்ளது. இதனால் போட்டி தொடர்ந்து நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :