புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:16 IST)

10 ஓவர் கடந்தும் விக்கெட் இழக்காத தென்னாப்பிரிக்கா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஓவர் கடந்தும் தென்னாப்பிரிக்காவை விக்கெட் இழக்காமல் விளையாடி வருவதைப் பார்க்கும்போது அந்த அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 287 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களை கடந்த போதிலும் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது
 
தென் ஆப்பிரிக்க அணி சற்று முன் வரை 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்து உள்ளன என்பதும் இன்னும் வெற்றிக்கு 216 ரன்கள் தேவை என்பது குறிப்பிடதக்கது