இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா!

Last Updated: திங்கள், 31 டிசம்பர் 2018 (18:53 IST)
ஆண்டுதோறும் பெண்கள் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கி  ஐசிசி கவுரவித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை இன்று அறிவித்தது.


 
ஐசிசி, ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் சாதனை செய்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, 2018ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 
 
இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இவர் 'சிறந்த கிரிக்கெட் வீராங்கனை' மற்றும் 'ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை' ஆகிய இரண்டு விருதுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஸ்லே ஹீலி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :