புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (12:29 IST)

ரோஹித் வீட்ல விஷேசம் – மும்பை பறந்தார்…

ரோஹித் ஷர்மாவுக்கு பெண் குழந்தை அடுத்ததை அடுத்து மகளையும் மனைவியையும் பார்பபதற்காக மும்பைப் பறந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் ஜாம்பவானான ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என அன்போடு அழைக்கப்படுகிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் தனக்கான நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதையடுத்து சிட்னி டெஸ்ட்டிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்ப்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் ஷர்மா ஒரு சந்தோஷமான செய்தியால் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை சென்றிருக்கிறார்.

ரோஹித் ஷர்மாவுக்கும் அவரது மனைவி ரித்விகாவுக்கும் பெண்குழந்தை பிறந்துள்ளதை அடுத்து மகளையும் மனைவியையும் பார்ப்பதற்காக ரோஹித் இன்று மும்பை செல்கிறார். இதனால் அவர் சிட்னி டெஸ்ட்டில் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட அவர் மீண்டும் ஜனவரி 8 ஆம் தேதி மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புகிறார்.