திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 மே 2023 (07:47 IST)

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம்: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த விராத்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு இருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.
 
பெங்களூர் அணியின் முக்கிய வீரரான கோலி கடந்த போட்டியில் சதம் அடித்த நிலையில் நேற்றைய போட்டியிலும் சதம் அடித்தார். இதனை அடுத்து அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏழு சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு முன்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரராக கிறிஸ் கெயில் இருந்தார் என்பதும், அவர் ஆறு சதங்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 மேலும் நடப்பு சீசனில் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி 639 ரன்களை பதிவு செய்துள்ளார் என்பதும் இதில் 65 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சதம் மற்றும் ஆறு அரை சதங்களை இந்த ஐபிஎல் தொடரில் அவர் அடித்துள்ளார்.
 
Edited by Siva