திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (11:53 IST)

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: டாஸ்மாக் மேலாளர் உத்தரவு..!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற உள்ளது.  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை என்ற பகுதியில் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளதை அடுத்து ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.  
 
தமிழக அரசின் சார்பில் கொல்லிமலையில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆண்டு தேதிகளில் பல்வேறு திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவின்போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva