செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (16:34 IST)

முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்ட் நிலவரம்

முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தது என்பதும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் என்பதால் தற்போதைக்கு இந்த தொடர் சமநிலையில் உள்ள என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தை அதை அடுத்து இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ரோச் பந்துவீச, இங்கிலாந்து அணியின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சிப்லே எதிர்கொண்டார். முதல் ஓவரில் முதல் 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆறாவது பதிலாக எல்பிடபிள்யூ முறையில் சிப்லே அவுட்டானார். இதனால் இங்கிலாந்து அணி அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிப்லே மிக அருமையாக விளையாடினார் என்பதும் ஒரு இன்னிங்ஸில் 120 ரன்களை குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்வரை இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது