ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (16:15 IST)

பிரபல பல் மருத்துவர் மறைவுக்கு ரஜினிகாந்த் சார்பில் இரங்கல்

ரஜினிகாந்த் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக வைரலாகி வருவது தெரிந்ததே. கபாலி ரிலீசாகி நான்கு வருடங்கள், சத்தியமாக விடவே கூடாது, கந்தனுக்கு அரோகரா, ரஜினிகாந்த் இபாஸ் விவகாரம், ரஜினிகாந்தின் பண்ணை வீட்டு புகைப்படங்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் டிரண்டாகி வைரலானது
 
இந்த நிலையில் சென்னையின் பிரபல பல் மருத்துவர் மறைவுக்கு ரஜினிகாந்த் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபம் நிர்வாகத்திடம் இருந்து வெளியான இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
டாக்டர் ஜானகிராமன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றோம். அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சார்பிலும், ராகவேந்திர மண்டபம் ஊழியர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரஙகலை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது