1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (19:15 IST)

ஸ்ரேயாஸ் ஐயரின் உச்ச பார்ம்… ஐசிசி அளித்த கௌரவம்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசிசி ப்ளேயர் ஆஃப் த மந்த் விருதைப் பெற்றுள்ளார்.

சமீபகாலமாக இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் கலக்கி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையடுத்து இப்போது அவருக்கு ஐசிசி ப்ளேயர் ஆஃப் த மந்த் விருது பிப்ரவரி மாதத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவத்தை இதற்கு இந்தியாவின் பண்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.