செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (12:07 IST)

இவ்வளவு தாழ்ந்து போவீங்கன்னு நினைக்கவே இல்ல..! – உச்சநீதிமன்றம் வேதனை!

கொரோனா இழப்பீடு பெற பலர் போலி ஆவணங்கள் தருவதாக வெளியான புகார் குறித்து உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பலர் கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலியான சான்றிதழ்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் “கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டை போலி சான்றிதழ் அளித்து பெற நினைப்பது கவலை அளிக்கிறது. நமது ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்து போகும் என நாங்கள் நினைக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது” என தெரிவித்துள்ளது.