திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (19:13 IST)

ஐதராபாத் நிஜாமின் ரூ. 315 கோடி பணம் இந்தியாவுக்கா ? பாகிஸ்தானுக்கா ? விரைவில் தீர்ப்பு

இங்கிலாந்து நாட்டின் தலைநகர்  லண்டன். இங்குள்ள லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாமின் பணம் யாருக்கு உரியது என்பது பற்றி லண்டன் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல வருடமாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் 6 வாரங்களில் வெளிவரவுள்ளதால் இருநாட்டு மக்களும் இதை அறிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளனர்.
நம் இந்தியா - பாகிஸ்தான் நாடு பிரிவினை நடைபெற்ற போது, ஐதராபாத் தனி சமஸ்தானமாக இருந்தது. இதை இந்தியாவுடன் இணைக்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நாட்டில் இருந்து நிஜாமுக்கு ஆதரவாக பல ஆயுதங்கள் தரப்பட்டன. 
 
இதனையடுத்து நிஜாமின் 10 லட்சத்து 800 பவுண்ட் பணம், இங்கிலாந்தில் நாட்டில் வசித்துவந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்துலாவுக்கு கடந்த 1948 ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்பணத்தை லண்டனில் உள்ள நேட்வேஸ்ட் வங்கிக்கணக்கில் பாகிஸ்தானின் தூதர் பெயரில் பத்திரமாக வைக்கப்பட்டது. 
இந்தப் பணத்தை தரும்படி நிஜாம் கோரினார், ஆனால் பாகிஸ்தான் கொடுக்க மறுத்துவிட்டது. இந்த பிரச்சனையைப் பற்றி தெரிந்துகொள்ள முயன்ற லண்டன் வங்கி யார் இந்த சொத்திற்கு உரிமையாளர் என்று தெரிந்த பிறகு பணத்தை ஒப்படைப்பதாகக் கூறிவிட்டது.
 
இந்நிலையில் மறைந்த நிஜாமின் வாரிசுகள் அனைவரும் இந்தியாவில் வாழுகிறார்கள். எனவே பலவருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது, குறிப்பாக இன்னும் ஆறு மாதத்தில் நிஜாமின் பலகோடி ( தற்போது வங்கியில் சுமார்  ரூ.315 கோடி )பணம் யாருக்கு சொந்தம் ( இந்தியாவுக்கா ? பாகிஸ்தானுக்கா ?) என்று தெரிந்துவிடும் என்று கூறிவருகிறார்கள்.