செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (21:59 IST)

ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட்: ஆஸ்திரேலியா திணறல்

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக மூன்று முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது 4வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது. மார்க்கம் 152 ரன்களும், பவுமா 95 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 2வது நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 378 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.