1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (15:11 IST)

மனைவியை விவாகரத்து செய்தார் ஷிகர் தவான்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜி என்பவரை விவாகரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஷிகர் தவான் - ஆயிஷா தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜி இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து இருந்ததாகவும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிகர் தவான் உடனான திருமணபந்தம் முடிவுக்கு வந்ததை உறுதி செய்துள்ளார் 
 
மேலும் தான் ஆயிஷா தவான் என்று இருந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிஷா முகர்ஜி என்று மாற்றி விட்டதாகவும் தெரிகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவியை விவாகரத்து செய்த செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது