வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (11:21 IST)

கோலிக்கு பின் தவான் செய்த சாதனை.!

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகா தவான் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை வெகு சுலபமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷிகார் தவான் 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் அவர் 6000 ரன்களைக் கடந்துள்ளார்.

இந்த சாதனையை ஷிகார் தவான் 140 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார். இந்திய கேப்டன் கோலி இதே சாதனையை 136 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.