இந்திய அணியின் இப்போது பேட்டிங் வலுவாக இல்லை… ஷேன் வார்ன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் டிராவிட் மற்றும் லஷ்மன் காலம் போல இப்போது வலுவாக இல்லை என ஜாம்பவான் பவுலர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி இப்போது உலக அரங்கில் நம்பர் ஒன் ஆக உள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களாக உருவாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வலிமை குறித்து முன்னாள் ஜாம்பவான் பவுலர் ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இந்திய அணி சிறந்த அணியாக இருந்தாலும், டிராவிட் மற்றும் லஷ்மன் ஆகியோர் கால பேட்டிங் போல இப்போது சிறப்பாக இல்லை. அப்போது டிராவிட், லஷ்மன், கங்குலி, சச்சின் போன்றவர்கள் சர்வதேச பந்துவீச்சாளர்களை பந்தாடினார்கள். இப்போது கோலி, ரோஹித் மற்றும் பண்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், இந்திய சிறப்பான அணியாக இருக்க பவுலிங்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.