திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (08:49 IST)

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முகமது ஷமி திடீர் நீக்கம்: அதிர்ச்சி காரணம்

Shami
இந்திய ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி விளையாட இருந்த நிலையில் திடீரென அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்னும் சில நாட்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டிக்கான அணி விபரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் முகமது ஷமி அணியில் இடம்பெற்றிருந்தார் 
 
இந்த நிலையில் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஷமிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணிகள் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது