செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (09:32 IST)

வெட்கமா இல்லையா... தோனி குறித்த வதந்திக்கு சாக்‌ஷி முற்றுப்புள்ளி!!

தோனி 1 லட்சம் மட்டுமே நிதி அளித்ததாக எழுந்த விமர்சனங்களுக்கு அவரது மனைவி சாக்‌ஷி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 
கொரொனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு  கடைப்பிடிக்கப்படுகிறது. ஊரடங்காள் பாதிக்கபடுவோருக்கு சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் நிதி வழங்கி வருகின்றனர். அண்டஹ் வகையில் தோனி 1 லட்சம் வழங்கியதாக செய்தி வெளியானது. 
 
இந்த செய்தி வெளியானதும் தோனி பல விமர்சனங்களுக்கு ஆளானார். உலகில் அதிகம் சம்பாதிக்கும் பணக்கார கிர்க்கெட் வீரர்களில் ஒருவராக தோனி ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளதற்கு நெட்டிசன்ஸ் அவரை விமர்சனம் செய்து கலாய்த்தனர். இந்நிலையில் இது குறித்து காட்டமாக விளக்கம் அளித்துள்ளார் தோனியின் மனைவி சாக்‌ஷி. 
 
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது, இதுபோன்ற முக்கியமான நேரங்களில் தவறான செய்திகள் வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஊடக அறம் எங்கே சென்றுவிட்டது என எனக்கு ஆச்சர்யமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.