ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (10:03 IST)

காமன்வெல்த்: தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு

PV Sindhu
72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொள்கின்றனர்.


22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இந்தநிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதனை இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. பி.வி.சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். மேலும் 2018-ம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போதும் இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.