அவர்லாம் நல்ல கேப்டனில்லை…. சேவாக்கையே கடுப்பாக்கிய வீரர்!

Last Updated: வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:24 IST)

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் நல்ல கேப்டனில்லை என்று விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்குக் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டார். ஆனால் அப்போதும் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை கொல்கத்தா வெளிப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள சேவாக் ‘இயான் மோர்கன் வலுவான டி 20 கேப்டன் இல்லை. இங்கிலாந்து போல வலுவான அனி அவருக்குக் கிடைக்கவில்லை. நல்ல அணி அமைந்தால் அவருக்கு வெற்றிகள் கிடைக்கலாம். இப்போதைக்கு என்னால் அவரை சிறந்த கேப்டன் என சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :