வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (21:56 IST)

2 விக்கெட்டுக்களை வீழ்த்திய தீபக் சஹார்: 18 ரன்கள் மட்டுமே திணறும் கொல்கத்தா!

2 விக்கெட்டுக்களை வீழ்த்திய தீபக் சஹா
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 220 ரன்கள் குவித்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் கொல்கத்தா அணி 221 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாட தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முதல் ஓவரிலேயே தீபக் சஹர் கில் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு தற்போது 3-வது ஓவரில் தீபக் சஹர், ரானா விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் 
 
இதனை அடுத்து கொல்கத்தா அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 18 ரன்களை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொல்கத்தா அணி எடுக்கவேண்டிய ரன்ரேட் 12க்கும் அதிகமாக இருக்கிறது என்பதும் 2 விக்கெட்டுகளை இழந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
எனவே இன்றைய போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பெரிய ரன்ரேட்டில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது