1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:49 IST)

தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி… இந்தியா நிதான தொடக்கம்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஆட்ட முடிவு ட்ரா ஆனது.

இதனைத்தொடர்ந்து இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க இருந்தது. டாஸில் இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி தொடங்குவது தாமதமானது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர தாமதத்துக்கு பிறகு இப்போது போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை சேர்த்துள்ளது.