தொடர்புடைய செய்திகள்
- 2வது டெஸ்ட்; இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்: அஸ்வினுக்கு இடம் உண்டா?
- #INDvsENG டெஸ்ட்; இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 263/3
- IND vs ENG : ஒரு வருடத்திற்கு பிறகு சென்னையில் மேட்ச்!!
- சென்னை வந்த தோனி அண்ட் கோ: பயிற்சிக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
மழையால் தாமதமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டி!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஆட்ட முடிவு ட்ரா ஆனது.
இதனைத்தொடர்ந்து இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க இருந்தது. டாஸில் இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி தொடங்குவது தாமதமாகியுள்ளது.
