வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (18:16 IST)

யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை – பாக். கேப்டன் மன்னிப்பு …

சமீபத்தில் நடந்த ஒரு மேட்சின் போது தென் ஆப்பிரிக்க வீரர் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறிய பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமீபகாலமாக ஸ்டம்புகளில் உள்ள மைக்குகளில் இருந்து ஆடியோக்களைக் கேட்கும் வசதிக் கிட்டியுள்ளதால் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட பண்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில் ரிஷப் பாண்ட் மற்றும் ஆஸி கேப்டன் டிம் பெய்ன் இடையிலான ஸ்லெட்ஜிங் வார்த்தை மோதல்களை ஸ்டம்ப் மைக்கில் கேட்டு ரசித்தனர்.

அதுபோல ஒரு சம்பவம் இப்போது மீண்டும் நடந்துள்ளது. ஆனால் இம்முறை ரசிக்கத்தக்க அளவில் இல்லாமல் அறுவறுப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த சர்பராஸ் தென் ஆப்பிரிக்கா வீரர் பெலுக்வயோவை நோக்கி ‘ “ஏய் கருப்பா, உன்னுடைய அம்மா எங்கே? உனக்காக பிரார்த்தனைச் செய்ய கூறினாயா என்ன?’ எனக் கூறினார். இந்த அறுவறுக்கத்தக்க அவரது நிறவெறித் தாக்குதல் வெளியாகி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்ச்சைகள் அதிகமானதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்பராஸ் அகமெதை கடுமையாகக் கண்டித்துள்ளது. இதை அடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சர்பராஸ் அகமது டிவிட்டரில் மன்னிப்புக் கேட்டுள்ளார். தனது டிவிட்டில் ‘ஆட்டத்தின் போக்கில் ஏற்பட்ட வெறுப்பில் பேசிய என் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் நான் அவர்களிடம் நேர்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அது ஸ்டம்ப் மைக்கில் கேட்டு விட்டது.’ என மன்னிப்புக் கேட்டுள்ளார்.

சர்பராஸின் இந்த சர்ச்சைப் பேச்சுக் குறித்து போட்டி நடுவர் ரஞ்சன் மதுகள்ளே சர்பராஸிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. சர்பராஸ் மீது ஐசிசி நிறவெறித் தடை விதிமுறை விதிக்கப்படுமா என்ற விவரம் தெரியவில்லை.