ஷிகர் தவானுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்றம் !

Last Modified புதன், 27 நவம்பர் 2019 (13:26 IST)
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் டி 20 தொடரில் இடம்பெற்றிருந்த ஷிகார் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிக் கொண்டார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்த சஞ்சு சாம்சன் இப்போது அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்ஸன் விக்கெட் கீப்பிங்கோடு நடுவரிசையில் சிறப்பாக விளையாடும் திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :