1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sanjana ganesan sarcastic comment on Bumrah bowling action

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

இந்திய அணி
இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பைக் கூட அவரால் ஏற்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய அவர் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பும்ராவின் காதல் மனைவி அவர் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது பும்ரா என்னிடம் வந்து “நம் கல்யாணத்துக்கு என் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றால் நாம் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாமா?” எனக் கேட்டார். நான் அவரிடம் “நீ பந்து வீசவே ஓட மாட்டாய். இதில் எங்கிருந்து ஓடிப்போய் கல்யாணம் செய்வது என்று?” என நக்கலாக சொன்னேன்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!