சானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் முன்னாள் கேப்டனின் மகன்!

Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (16:52 IST)
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் அவர்களை திருமணம் செய்த நிலையில் தற்போது சானியா மிர்சாவின் தங்கை, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ஒருவரின் மகனை திருமணம் செய்யவுள்ளார். ஆம், அசாருதீன் மகன் ஆசாத்தை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் திருமணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை நாட்டிற்காக பெற்று கொடுத்தவர் அசாருதீன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அசாரூதின் அதன்பின் அரசியலில் குதித்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.

இந்த நிலையில் அசாரூதின் மகன் ஆசாத்துக்கும் சானியா மிர்சாவின் தங்கை ஆனமுக்கும் திருமணம் பேசி முடித்து நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை சானியா மிர்சா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து சானியா மிர்சா ஊடகம் ஒன்றில் பேட்டியளித்தபோது, ‘ஆம் எனது தங்கை ஆனம், அசாரூதின் மகனை திருமணம் செய்யவுள்ளது உண்மைதான். வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும். இந்த திருமணத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த திருமணத்தால் இரண்டு குடும்பமும் நெருக்கமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றுக்கொண்ட சானியா மிர்சா தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர்மீண்டும் டென்னிஸ் களம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :