நான்கே மாதத்தில் 26 கிலோ எடை குறைப்பு – சானியா மிர்சா அளித்த அதிர்ச்சி !

Last Modified செவ்வாய், 31 டிசம்பர் 2019 (14:17 IST)
மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட நான்கே மாதத்தில் 26 கிலோ எடைக் குறைத்துள்ளார் சானியா மிர்சா.

இந்தியா டென்னிஸ் நாயகியான சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்ட பின்னும் இந்தியாவுக்காக போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட்ட அவர், இப்போது மீண்டும் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறார். ஜனவரி மாதம் 11 ஆம் தேதி நடக்க இருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் இரட்டையர் பிரிவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இதற்காக அவர் கடந்த 4 முதல் 5 மாதங்களாக கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டு 26 கிலோ எடையை குறைத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் ‘ எனக்கு உறுதுணையாக இருந்த எனது தாய் மற்றும் சகோதரிக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டிகள் எனது மனதில் உள்ளன. ஆனால் அவை எனது உடனடி இலக்கு அல்ல’ எனத் தெரிவித்துள்ளார். சானியா மிர்சாவின் இந்த கடுமையான அர்ப்பணிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :