திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (09:05 IST)

மீண்டும் களம் இறங்குகிறார் சானியா! ரசிகர்கள் மகிழ்ச்சி!

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா மீண்டும் டென்னிஸில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் டென்னிஸை தெரியாதவர்களையும் டென்னிஸ் போட்டிகளை திரும்பி பார்க்க வைத்தவர் வீராங்கனை சானியா மிர்சா. இந்தியாவில் விளையாட்டுத்துறையில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிறகு சானியா மிர்ஸாவுக்குதான் அந்த காலங்களில் ரசிகர்கள் அதிகம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வளித்தார். பிறகு தனக்கு குழந்தை பிறந்து விட்டதால் அதை பேணி காப்பதிலேயே நாட்களை செலவிட்ட சானியா தற்போது மீண்டும் டென்னிஸ் விளையாட இருக்கிறார்.

இதற்காக உடற்பயிற்சி செய்து வரும் சானியா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.