காதலனைக் கடத்திய டென்னிஸ் வீராங்கனை: திடுக்கிடும் தகவல்

kidnap
Last Updated: புதன், 15 மே 2019 (21:12 IST)
சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியைச் சேர்ந்தவர் வாசவி. இவர் டென்னிஸ் வீராங்கனையாக உள்ளார். இவரும் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீத் அமகதுவும்  காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் நவீதை கடத்தியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த வாட்ச், ஐ போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 
பின்னர் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நவீதின் காதலியே அவரை கடத்த ஆள் வைத்தது தெரியவந்தது.
 
இந்நிலையில் வாசவியை போலீஸார் விசாரித்த போது, தன்னோடு காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி சமூகவலைதளங்களில் வெளியிடப் போவதாக  என்னை மிரட்டியதால் இந்தப் புகைப்படங்களை அழிக்கவே நவீதை கடத்த முயற்சி மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
.
மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருவதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :