சர்வதேச டென்னிஸ் போட்டியில் ’100 வது’ பட்டம் பெற்ற வீரர்

federar
Last Modified ஞாயிறு, 3 மார்ச் 2019 (12:31 IST)
உலக டென்னிஸ் அரங்கில் பல வெற்றிகளை வாரிக்குவித்தவர் பெடரர். அவரது டென்னிஸ் பயணத்தில் எத்தனையோ வெற்றிகள் பட்டங்கள் பரிசுகள் பெற்றிருக்கிறார். 
இந்நிலையில் துபாயில் ஆண்களுக்கான ஏடிபி டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 7ஆம் நிலை வீரர் ரோஜர் பெடருடன் 11 ஆம் நிலை கிரீஸ் வீரரான ஸ்டெபானொஸ் சிட்சிபாஸ் மோதினார். இந்தப்போட்டியில் 6 -4 , 6 -4 என்ற நேர் செட்களில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் பெடரர்.
 
சர்வதேச டென்னிஸ் அரங்கில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும். ஒலிம்பிகில் தங்கப்பதக்கதையும் வென்று சாதித்துள்ளார். 
 
இந்தப் போட்டியில் அவர் 100 வது முறையாக  சாம்பியம் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் என்பவர் தான் இதற்கு முன் 109 முறை பட்டங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள். 
 
தற்போது 100 வது பட்டம் பெடரருக்கு பலரும்  பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :