1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:24 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சானியா-போபண்ணா ஜோடி அபார வெற்றி!

sania
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போன் நகரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்தாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் அபாரமாக விளையாடி வருகிறார். 
 
ஏற்கனவே கால் இருதிக்கு தகுதி பெற்ற சானியா - போபண்ணா ஜோடி இன்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில் ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ்
 ஜோடியுடன் மோதினர்.
 
இந்த போட்டியில் சானியா மிர்சா - போபண்ணா மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த தகவலை போபண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran