சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தை தெரியுமா?

sania
Last Modified செவ்வாய், 30 அக்டோபர் 2018 (10:45 IST)
இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவர் திருமணத்திற்கு பின்னரும் ஒரு இந்திய பெண்ணாக இருந்து, இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார்.
malik
 
கடந்த ஏப்ரல் மாதம் சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பும் நடைபெற்றது.
tweet
 
இந்நிலையில் சோயிப் மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், சானியா நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இறைவனுக்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருவருக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :