ஆடியோ வெளியிட்டது மாஃபியா அல்ல மாமியா - தங்க தமிழ்ச்செல்வன்

Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (12:32 IST)
அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவை நாங்கள் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் தயாரே வெளியிட்டுள்ளார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

 
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் டி.ஜெயக்குமார் என பதிவிடப்பட்டுள்ளது.  
 
ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். தினகரன் மாஃபியா கும்பல் ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் “ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவை நாங்கள் வெளியிடவில்லை. டிடிவி மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே எங்கள் மீது ஜெயக்குமார் பழி போடுகிறார். ஆடியோவை மாபியா கும்பல் வெளியிடவில்லை. அவரின் மாமியார்தான் வெளியிட்டுள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் மவுனமாக இருக்கிறார். நடவடிக்கை எடுத்தால் பல உண்மைகள் வெளியே வரும்” என அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :