குழந்தைக்கு இந்த பெயரையா வைத்துள்ளார் சானியா!!

malik
Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (12:10 IST)
இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிற்கு பிறந்திருக்கும் ஆண் குழந்தைக்கு இஜான் என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவர் திருமணத்திற்கு பின்னரும் ஒரு இந்திய பெண்ணாக இருந்து, இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பும் நடைபெற்றது.
 
இந்நிலையில் நேற்று சோயிப் மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், சானியா நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டுள்ளனர். இஜான் என்றால் அரபு மொழியில் கடவுளின் பரிசு என்று அர்த்தம்.  மிர்சா மாலிக் அவர்களின் குடும்பப் பெயர். இருவருக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :