1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:34 IST)

இந்தோனேஷிய விமானத்தில் குழந்தை மீட்பு...?

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து இன்று காலையில் புறப்பட்ட லயன் ஏர் விமானமானது 189 பயணிகள் மற்றும் 6 பணிப்பெண்கள் 2 விமான ஓட்டிகளுடன் பினாங்க் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கிளம்பிய 13வது நிமிடத்திலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முழுவதுமாக இழந்தது. இதனால் விமான ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
சரியாக காலை 7:20மணிக்கு மேல் பிங்கல் பகுதியில் தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் இன்னும் வாரததால் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
 
இதனையடுத்து விமானம் விழ்ந்ததாக கருதப்பட்ட சுமத்ரா கடல் பகுதியில் அதிகாரிகள் விமானத்தை தேடத் தொடங்கினர்.
 
அங்கு விமானத்தின் சிதைந்த பாகங்களும் பயணிகளின் பைகளும் கிடந்துள்ளது.
 
இதில் முக்கியமாக இந்த விமானத்தை இயக்கியது இந்தியர் என்று நேற்றைய செய்திகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஒரு பச்சிளம் குழந்தை விமானத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அந்த விமானத்தில் பயணம் செய்த தாய் குழந்தைக்கு உயிர் காக்கும் உடையை அணிவித்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 
தண்ணீரில் மிதந்து வந்த அந்த குழந்தைக்காக அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்தக்குழந்தை கடந்த ஜுலை மாதத்தில் இந்தோனேஷியாவில் நடந்த படகு விபத்தின் போது மீட்கப்பட்டது என அந்த புகைப்படம் பற்றி கூறுகிறார்கள்.
 
இந்நிலையில் விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தால் தான் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தெரியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.