1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (20:41 IST)

பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடியை தொடர்ந்து மொயின் அலி - சாம் குரான் ஜோடி அசத்தல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்றும் வரும் 4வது டெஸ்ட் போட்டியில் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடியை தொடர்ந்து மொயின் அலி- சாம் குரான் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
 
ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 4வது விக்கெட்டுக்கு பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்த ஜோடி வெகு நேரம் நிலைக்கவில்லை. இந்த ஜோடி வெளியேறிய பின் மொயின் அலி - சாம் குரான் ஜோடி தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
 
தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்துள்ளது.