டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை சாய்னா வெற்றி

saina
Last Modified புதன், 17 அக்டோபர் 2018 (11:49 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனையிடம் போராடி வெற்றி பெற்றார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனை செங் நகன் யுயையிடம் மோதினார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இருவருமே சிறப்பாக விளையாடினர்.
 
கடைசியில் சாய்னா 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் சாய்னா ஜப்பான் வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :