காதலரை கரம்பிடிக்க இருக்கும் சாய்னா நேவால்

saina
Last Modified செவ்வாய், 9 அக்டோபர் 2018 (09:29 IST)
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தன் காதலன் காஷ்யப்பை கரம்பிடிக்கப்போவதாக உறுதி செய்துள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்துவருபவர் சாய்னா நேவால், இவர் இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.
 
இவரும் பேட்மிண்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து சாய்னா எந்த பதிலையும் அளிக்காமல் மவுனம் காத்தார்.
 
இந்நிலையில் சாய்னா தனக்கும் காஷ்யப்புக்கும் வரும் டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் நடைபெற விருப்பதாக கூறியிருக்கிறார். நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்த்கிற்கு அழைத்திருப்பதாகவும், ரிசப்ஷன் ஹைத்ரபாத்தில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :