1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (18:02 IST)

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் சாகித் அப்ரிடிக்கு மிகப்பெரிய பதவி...!

Shahid Afridi
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்ல்ன் சாகித் அப்ரிடிக்கு மிக உயர்ந்த பதவியை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேசிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாகித் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து அவர் கூறியபோது இந்த பொறுப்பை வழங்கியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்றும் எனது திறமைக்கு ஏற்றவாறு இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார். 
 
மேலும் பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேசிய அணி வலுவாக செயல்படவும் ரசிகர்களை நம்பிக்கையைப் பெறவும் நாங்கள் உதவுவோம் என்றும் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran