வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (09:16 IST)

பிரதமர் சொல்வதை கேளுங்கள் : டெண்டுல்கர், கோலி வேண்டுகோள்!

நாட்டில் கொரோனாவை தடுக்க பிரதமர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றுமாறு டெண்டுல்கர், கோலி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோடியின் ட்வீட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் ”நமது அரசும், மருத்துவ நிபுணர்களும் நம்மை 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க சொல்லி இருக்கிறார்கள். நானும் எனது வீட்டில் உள்ளோரும் 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேற மாட்டோம். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி வீட்டில் இருக்கும் நாட்களில் குடும்பத்தோடு நிம்மதியாக நேரத்தை செலவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகிய மற்ற கிரிக்கெட் வீரர்களும் ஊரடங்கை கடைபிடிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.