மீண்டும் பேட்டை எடுக்கும் சச்சின், லாரா, காலிஸ் & சேவாக் – டி 20 தொடர் பிப்ரவரியில் தொடக்கம் !

Last Modified புதன், 16 அக்டோபர் 2019 (08:05 IST)
சாலை விழிப்புணர்வு சம்மந்தமாக நடக்கும் புதிய டி 20 தொடரில் சச்சின், லாரா உள்ளிட்ட ஜாம்பவான்கள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் எனும் தொடர் சாலை பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்க இருக்கிறது.  இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, சேவாக், காலிஸ், முரளிதரன் பிரட் லீ, ஷிவ்நரைன் சந்தர்பால் உள்ளிட்ட 110 கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் பாணியில் இந்தியன் லெஜன்ட்ஸ், ஆஸி. லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்தத் தொடரை புரொபஷனல் மேனேஜ்மெண்ட் குழுமமும் மஹாராஷ்டிரா சாலைப் பாதுகாப்புப் பிரிவும் சேர்ந்து நடத்துகின்றன. இதன் மூலம் வரும் வருவாய் முழுவதும் ரோட் சேஃப்டி செல் பயன்படுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :