வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (16:12 IST)

விஜய் பட இயக்குநரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள் ...

நடிகர் விஜய் நடித்த சச்சின் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராகவா ராஜா. இவர் தற்போது கடவுள் சீட்டு என்ற  திரைப்படத்தை இயக்கியுள்ளார். 
இந்நிலையில், இவர், நேற்றிரவு  காமகோடி குகன் நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் ராஜாவின் முதுகைத் தட்டியுள்ளனர். அவர் பின்னால் திரும்பி யார் என பார்த்த போது, அவரது செல்போனை பறித்துச் சென்று அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
 
இதனையடுத்து, இயக்குநர் ராஜா போலீஸில் புகார் அளித்தார். இதனடிப்படையில் வழகு பதிவு செய்த போலீஸார், திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.