வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:37 IST)

கொரோனா தொற்று உறுதி… வீட்டில் இருந்த சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா பாதிப்புக்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர் இன்று மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வுக்கான ஓய்வு பெற்ற வீரர்களின் தொடரில் கலந்துகொண்டார். அந்த தொடர் முடிந்த சில தினங்களில் இப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் சோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

ஆனால் அவரின் குடும்பத்தார் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் முடிவு வந்துள்ளது. இதனல் சச்சின் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.